மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 16ந் தேதி வெளியீடு..!!

தற்போதைய காலக்கட்டத்தில் 108 அம்புலன்ஸின் சேவை வலுப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்.

மேலும் 200 மருத்துவ அவசர ஊர்திகளை பொதுமக்கள் சேவைக்காக அளிக்கப்போவதாக கூறியுள்ளார். இதன்முலம் ஆம்புலன்ஸ் சேவையானது சர்வதேசஅளவை இன்னும் ஓரிரு மாதங்களில் எட்டிவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் மருத்துவ அவசர ஊர்திகளில் GPS கருவி பொருத்தப்பட்டு வாகனத்தின் நிலையை செல்போனில் காட்டும் செயலி உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதன்முலம் பொதுமக்களுக்கு நம்பிக்கையும், ஓரே விபத்திற்கு பலமுறை அவசர அழைப்பை தொடர்பு கொள்வது தவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்புவதற்கு இன்று கடைசிநாள் என்பதை நினைபடுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், விண்ணப்பத்தில் பிழை இருப்பின் அதை திருத்திக்கொள்ள தேர்வு ஆணையத்திற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்முலம் சிறிய பிழைக்காக விண்ணப்பம் நிராகரிக்கபடுவது தவிர்க்கப்படும் என்றார்.

இதுவரை 34,427 பேர் மருத்துவ கலந்தாய்வுக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தரவரிசைப்பட்டியல் வருகின்ற 16 ஆம் தேதி வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஓரிரு நாட்களில் 7.5 சதவிகித அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுடன் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்மென்று  கூறியுள்ளார்.

இந்த மருத்துவ கலந்தாய்வானது திட்டமிட்ட எண்ணிக்கையில் புதிய கொரோனா விதிமுறைக்குட்பட்டு நேரடி கலந்தாய்வாக இருக்குமென்று அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆள்மாறாட்டம் உள்பட எந்த தவறுகளும் நடைபெறாது. மேலும் ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டும் கலந்தாய்வு நடத்துவதற்கான வாய்ப்புள்ளதா கூறியுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் படி குறைந்த பட்சம் 304 மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே