கரூரில் சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி பேருந்து

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகத்தின் சார்பாக சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி பேருந்தை மாவட்ட வருவாய் அலுவலர் இராஜேந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பார்வையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்ட இந்த பிரச்சார வாகனம், இன்று ஒரு நாள் முழுவதும் கரூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டியதன் அவசியம், சீட்பெல்ட் அணிவதன் அவசியம், அதிவேகத்தில் வாகனத்தை இயக்க கூடாது, சாலை போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் தாங்களாகவே அறிந்துகொள்ளும் வகையில் விளையாட்டுகள் அடங்கிய அமைப்புகள் இந்த விழிப்புணர்வு கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக பொதுமேலாளர் குணசேகரன், கரூர் வருவாய் கோட்டாச்சியர் சந்தியா, மகளிர் திட்ட சுப்பிரமணியன், உதவி பொறியாளர் சிவப்பிரகாசம், மோட்டார் வாகன ஆய்வாளர் தனசேகரன், இரவிச்சந்திரன், மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே