கல்லூரி இறுதி பருவத் தேர்வு தவிர பிற பருவத் தேர்வுகள் எழுவதில் இருந்து விலக்கு – முதல்வர் அறிவிப்பு

கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர மற்றத் தேர்வுகளுக்கு விலக்கு அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்பவும், யுஜிசி, இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின் அடிப்படையிலும்; தமிழக உயர்மட்டக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக உயர்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதுகுறித்த விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே