வாக்கு எண்ணும் மையத்தின் மேலே ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு..!!

நாகையில் உள்ள தெத்தி பகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தின் மேலே பறந்த ட்ரோன் பறந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனால், மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகையில் உள்ள தெத்தி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 சட்டமன்றத் தொகுதிகளாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ராணுவ போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை பத்து நிமிடத்திற்கு மேலாக அந்த தனியார் கல்லூரி மேலே ட்ரோன் பறந்துள்ளது.

ட்ரோனை பறக்கவிட்ட மூன்று பேரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ட்ரோன் கேமரா மற்றும் கேமரா பதிவு செய்த காட்சிகளை வைத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திமுகவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே