மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முதல்கட்டமாக 70 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்.,6 ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பல்வேறு கட்சிகள் தங்களின் அணியில் இடம்பெற கூடிய கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முடித்து உள்ளது.

தொடர்ந்து தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டார்.

இதில் சினேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பணியாற்றிய பொன்ராஜ் அண்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பத்மபிரியா – மதுரவாயல்

ரமேஷ் கொண்டலசாமி – மாதவரம்

பாசில் – ஆர்.கே.நகர்

பொன்னுசாமி – பெரம்பூர்

சந்தோஷ்பாபு – வில்லிவாக்கம்,

பிரியதர்ஷினி – எழும்பூர்

பொன்ராஜ் – அண்ணாநகர்

சிநேகன் – விருகம்பாக்கம்

சிநேகா மோகன்தாஸ் – சைதாப்பேட்டை

செந்தில் ஆறுமுகம் – பல்லாவரம்

சிவ இளங்கோ – தாம்பரம்

லாவண்யா – திருப்போரூர்

முருகானந்தம் – திருவெறும்பூர்

உமா தேவி – அருப்புக்கோட்டை

உள்ளிட்டோர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே