மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொலி காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து இதில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி வருகிற 22-ஆம் தேதி மக்கள் வெளியே வரவேண்டாம் சுய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இதன் மூலமாக கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கூறியிருந்தார்.

ஞாயிறு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.

இந்தியாவில் இன்று மாலை நிலவரப்படி 223 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Ministers Vijayabaskar, Udayakumar and officials were present at the Chennai headquarters along with Tamil Nadu Chief Minister Palanisamy.

இந்நோய்க்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை வீடியோ கான்பிரன்சிங் வழியாக விரிவான ஆலோசனை நடத்தினார்.

மாநிலவாரியாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல் மந்திரிகள் பிரதமருக்கு விளக்கம் அளித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கரோனா தொற்றை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி எடுத்துரைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே