இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் நாள்தோறும் ஒன்று, இரண்டு பேர் என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் கொத்து கொத்தாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று வரையில் 1,075 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பொதுமக்கள் அதிகமாக எங்கும் கூட்டம் , கூட்டமாக கூட கூடாது என்பதற்காக அனைத்து சேவைகளையும் அரசு ஆன்லைன் மூலமாகவும் செய்து வருகிறது.

இந்த வரிசையில் தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான அவகாசம் மே 6 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதள வழி மூலம் வலைதள வங்கியில் , கைபேசி வங்கியியல் , பேமண்ட் கேட்வே , பிபிபிஎஸ் , முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே