ஜூன் 6ம் தேதி வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம் – தமிழக மின்சார வாரியம்

ஜூன் 6ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கோவிட்-19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போது இந்திய அரசு ஊரடங்கினை மேலும் 2 வாரங்களுக்கு 18.05.2020 முதல் 31.05.2020 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் அதே போன்று ஊரடங்கு 18.05.2020 முதல் 31.05.2020 வரை சில வழிகாட்டுதல்களுடன் தொடரப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 25.03.2020 முதல் 05.06.2020 வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த (எல்டி/எல்டிசிடி) நுகர்வோர்கள் தங்களது மின்இணைப்பிற்கான மின்கட்டணத்தை 06.06.2020 வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே