பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு தடை – தமிழக அரசு மேல்முறையீடு..!!

பொது விநியோகத் திட்டத்துக்கு பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 80 லட்சம் லிட்டர் பாமாயில் ஒப்பந்தத்திற்குத் தடை விதித்ததற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரேஷன் பருப்பு, பாமாயில் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு விதித்த தடையை நீக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே