இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பிராந்தியமான லடாக்கில் சீனா ஊடுருவலுக்கு பின்னர் மத்திய அரசு பாதுகாப்புத் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி ஏற்கனவே 116 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில் இந்தியாவில் மேலும் 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் 18 கோடி பேர் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்த பப்ஜி மொபைல் கேம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே