3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஈஃபிள் டவர்!

உலகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த போது, பொது முடக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற ஈஃபிள் டவர் இன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்காக ஈஃபிள் டவர் திறக்கப்பட்டாலும், பாரீஸ் நகரம் அதன் இயல்பு நிலைக்கு இன்னமும் திரும்பவில்லை.

உலகப் போருக்குப் பிறகு, கரோனா வைரஸ் காரணமாகவே ஈஃபிள் டவர் இவ்வளவு நீண்ட காலம் மூடி வைக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் ஈஃபிள் டவரைப் பார்வையிட குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

11 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பார்வையாளர்களுக்கும் முகக்கவசம் கட்டாயம்.

ஜூலை 1 வரை மின்தூக்கிகள் செயல்படாது என்றும், பார்வையாளர்கள் படிகட்டுகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1071 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே