மும்பை நகரில் அதிகாலை முதல் கனமழை

மும்பையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்வதால் மாநகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், இன்று அதிகாலை முதல் கனமழை பதிவாகி வருகிறது.

மஹா புயல் வலுவிழந்தாலும் அதன் தாக்கத்தால் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கடற்கரை நகரமான மும்பை, கனமழையை எதிர்கொண்டிருக்கிறது.

பரேல், மாலாடு உள்ளிட்ட மும்பையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்ததால், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதேபோன்று ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படும், மகாராஷ்டிராவின் தானேவிலும் கனமழை பெய்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே