சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்காவுக்கு 24 வயதாகிறது. எம்பிஏ பட்டதாரி. இவருக்கும், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் கல்யாணம் நடந்தது.
நிரேஷ் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.. மேட்ரிமோனியல் மூலமாகத் தான் இந்த பெண்ணை பார்த்து இந்த கல்யாணம் நடந்துள்ளது.
2 மாதம் தான் தம்பதி சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.
ஏதேதோ காரணங்களாக வீட்டில் சண்டை வெடிக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பிரியங்கா தன்னுடைய அம்மா வீட்டுக்கே துரத்தி அடிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடுராத்திரி பிரியங்கா தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்த பிரியங்கா சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையையும் ஆரம்பித்தனர்.
அப்போதுதான், இது வரதட்சணை பிரச்சனை என்று தெரியவந்தது.
கல்யாணத்துக்கு 140 சவரன் பெண்ணுக்கு நகை போடுவதாக, பெண் வீட்டார் சொல்லி உள்ளனர். ஆனால் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும் , அதனாலேயே ரெண்டு வீட்டாருக்கும் அடிக்கடி பிரச்னை நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி , பிரியங்காவை அம்மா வீட்டிற்கே துரத்தி விட்டதாகவும் தெரிகிறது.
இதனால் கல்யாணமாகி 2 மாசத்திலேயே தாய் வீடு சேர்ந்தார் பிரியங்கா. வந்த நாளில் இருந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார்.
நகையை எப்படியாவது போட்டுவிடுகிறோம் என்று நிரேஷ் வீட்டினரிடம் பிரியங்காவின் பெற்றோர் சொல்லி உள்ளனர்.. சமாதானமும் செய்து வந்துள்ளனர்.
ஆனால் நிரேஷ் வீட்டில் உடனடியாக எல்லா நகையும் வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் நேற்று முன்தினமெல்லாம் கதறி கதறி அழுது கொண்டிருந்திருக்கிறார் பிரியங்கா. நள்ளிரவில் மன உளைச்சல் தாங்காமல் தன் ரூமிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நிரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்து வருகின்றனர்..
கல்யாணம் ஆகி ஒரு வருடம்கூட ஆகாத நிலையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்டிஓ விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.