#BREAKING : சென்னையில் ஐ.டி. நிறுவனங்களில் 50% ஊழியர்கள் பணியாற்ற அனுமதி

சென்னையில் ஐ.டி.நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

தற்போது உள்ள நடைமுறைப்படி பணியாற்றுவதில் உள்ள சிரமத்தினை தெரிவித்தனர்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் சிரமத்தை களையும் வகையில் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் ஜூலை 13-ம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும் இதில் 90% பணியாளர்கள் அந்நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பொது போக்குவரத்து வசதிகளை மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் முடிந்த வரையில் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே