நிறைய கவலைப்படறீங்களா? இந்த 5 ஆயுர்வேத உணவும் உங்க எல்லா கவலையையும் மறக்கடிச்சிடும்.

இந்த கொரோனா கால கட்டத்தில் நமக்கு கவலை, பயம் போன்றவை இருக்கிறது. இதை சமாளிக்க ஆயுர்வேத மூலிகைகள் உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த ஆயுர்வேத மூலிகைகளில் நம்முடைய மன அழுத்தத்தை போக்கி மனதை ரிலாக்ஸ் செய்யும் தன்மை காணப்படுகிறது.
ஆயுர்வேதம்

எல்லாருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கவலை அல்லது அனிஸிட்டி பிரச்சினை தான். கவலைப்படாத மனிதர்களே இல்லை எனலாம். கவலைப்படுவதால் வராத நோய்கள் கூட நம்மை வந்து சேர்கிறது. உண்மையில் சொல்லப் போனால் நாம் கவலைப்படுவதை தடுக்க நாம் உண்ணும் உணவுகள் உதவுகின்றன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். இந்த உணவுகள் உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுமாம்.
கோவிட் -19 தொற்றுநோய், பூட்டுதல், நோய்த்தொற்றின் விரைவான பரவல், அதன் முடிவு குறித்த நிச்சயமற்ற தன்மை, நிதி இழப்புகள், எண்ணற்ற மரணங்கள், நடிகர்கள் காலமான செய்திகள், இந்தோ-சீன முன்னணியில் போர் போன்ற நிலைமை மற்றும் தனிப்பட்ட பல சண்டைகள் என நம்மைச் சுற்றி எப்பொழுதும் கவலை கலந்த சூழல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

இந்த கவலைகளையெல்லாம் ஒரு மூட்டைக்கட்டி தூக்கி போட்டு விடலாம் என்று நினைப்போம். ஆனால் உங்க கவலைகளை எல்லாம் போக்க நீங்கள் உட்கொள்ளும் உணவுகளில் கவனம் செலுத்தினால் போதுமானது.

இந்த ஆயுர்வேத உங்களுக்கு ஏற்படும் பதட்டம், கவலை இவற்றை போக்கி உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

​பிராமி
பிராமி உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 1996 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, இது மத்திய நரம்பு மண்டலத்தில் ஒரு அமைதியான, மன அழுத்த எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. உண்மையில், 2003 இல் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், பிராமி மூளையை மன அழுத்தத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது என்பதைக் காட்டுகிறது. எனவே தினசரி இதை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்க மனதை அமைதியாக வைப்பதோடு பதட்டத்தை தணிக்க முடியும்.

​கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி இலைகள் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக் கூடிய ஒன்று. எனவே கரிசலாங்கண்ணி எண்ணெய்யை தலைக்கு தேய்க்கும் போது உச்சந்தலையில் ஊட்டமளிக்கும் பண்பை கொண்டுள்ளது. இதை நீங்கள் மூலிகை தேநீர், நீரில் கரைக்கப்பட்ட தூள் போன்ற வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்கலை ஊக்குவிக்கும், மேலும் உங்கள் மூளையை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்ற உதவுகிறது. மன அழுத்தத்தை தணித்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

​அஸ்வகந்தா
அஸ்வகந்தா மிகவும் பிரபலமான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாகும். சகிப்புத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி, வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் அறிவாற்றல் மற்றும் நரம்பியல் கோளாறுகளை எதிர்த்துப் போராடுவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. 2003 ஆம் ஆண்டு ஆய்வின் படி அஸ்வகந்தா உங்களுக்கு பதட்டத்தையும் நிர்வகிக்கவும் குறைக்கவும் உதவும். இந்த மூலிகையின் சாறு அமைதியான பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் மூளையில் மன அழுத்த எதிர்ப்பு அடாப்டோஜெனிக் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

நெய்
பல ஆயுர்வேத நிபுணர்கள் நெய் சாப்பிடுவது மன அமைதியை உண்டாக்கும் என கூறுகிறார்கள். நெய்யில் ஒரு விரலை நனைத்து, லேசான கவலையைத் தணிக்க உங்கள் நாசியை மெதுவாக மசாஜ் செய்ய பலர் பரிந்துரைக்கின்றனர். அதே மாதிரி உங்கள் தினசரி உணவில் ஒரு டீஸ்பூன் சேர்ப்பதன் மூலம் நெய்யில் உள்ள நல்ல கொழுப்புகளின் அடக்கம், மனச்சோர்வு எதிர்ப்பு பண்புகளை தருகிறது. எனவே நெய்யை அடிக்கடி உங்கள் உணவில் சேர்ப்பது நல்லது.

துளசி
தொடர்ச்சியான அல்லது நீண்டகால மன அழுத்தம் உங்க உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதை நீங்கள் சரியாக கவனிக்காவிட்டால் , இந்த மன அழுத்தம் விரைவில் கவலை அல்லது மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறாக உச்சக்கட்டத்தை அடைகிறது.

துளசி மன அழுத்தத்தை தடுக்கும் தடுப்பானாக செயல்படுகிறது. பதட்டத்தின் விளைவாக உடலில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்கள் துளிசியில் இருப்பதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தீர்வாகவும் அமைகிறது. எனவே உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த துளசி சாற்றை கூட நீங்கள் குடிக்கலாம். வழக்கமான தியானம் மற்றும் உடற்பயிற்சியுடன் மேற்கண்ட உணவுகளையும் சேர்த்துக் கொண்டு இருந்தால் கவலை இல்லாமல் வாழலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே