இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்..!!

இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்களை நினைவுகூரும் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்தனர்.

இதற்கு தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீண்டும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. மாணவர்கள் மற்றும் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

நினைவுத்தூண் பழைய மாதிரிலேயே அரசின் அங்கீகாரத்துடன் கட்டி முடிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா உறுதி அளித்துள்ளார்.

மேலும், துணைவேந்தரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே