தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்..!!

தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,344 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 5,263 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர், மேலும் சிகிச்சை பலனின்றி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவின் 2-வது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடும் திருவிழா நடைபெற்று வருகிறது.

அதற்காக தமிழக அரசு, கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து 55.85 லட்சம் தடுப்பூசிகள் பெறபட்டுள்ளதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசிடம் இருந்து இதுவரை 55.85 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 55.85 லட்சம் தடுப்பூசிகளில் 47.05 லட்சம் அளவு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீதம் உள்ள 8.8 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே