ஜூன் தொடக்கத்துக்குள் கொரோனா உச்சத்தை தொடும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் கரோனா நோய்த் தொற்று உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது. கடந்த 14 நாள்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதிலும், நாள்தோறும் 36,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் 19 கொண்ட மருத்துவ நிபுணா்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனையின்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் கரோனா நோய்த் தொற்று உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன்பிறகு, பேரவை கட்சிகளைச் சோந்த 13 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பொதுமுடக்கம் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே