தமிழகத்தில் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது : தமிழக அரசு

வாடகை வீட்டில் வசித்து வருவோரிடம் கட்டாயப்படுத்தி வாடகையை வசூலிக்க கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.

கிட்டத்தட்ட 45,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

7,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக இந்தியா முழுவதிலும் மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இதனால் கூலித்தொழிலாளர்கள், கட்டிட பணியாளர்கள் ஆகியோர் வருமானம் என்று சிக்கி தவித்து வருகின்றனர்.

இதனையே உண்ண உணவின்றி, அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு இடம்பெயரும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஓரடங்கும் நாடு முழுவதிலும் வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து அரசாங்கம் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதாவது, “வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் வாழும் தினக்கூலி மற்றும் கூலித்தொழிலாளர்களிடமிருந்து ஒரு மாத வாடகையை பெறக்கூடாது.

மேலும் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வீடுகளிலிருந்து வெளியேற்ற கூடாது.

தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். அவர்கள் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

மேலும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் சம்பளத்தை ஊரடங்கு கணக்கு காட்டி செலுத்தாமல் இருக்கக்கூடாது.

மேற்கூறிய அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே