கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்ற பெயரில் விற்பனை செய்யும் மருந்துகளை நம்ப வேண்டாம் – பீலா ராஜேஷ்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் மருந்துகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்ட 7 பேர், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதார அலுவலகத்தில் கொரானா வைரஸ் நோய்த்தடுப்பு மருந்து இருப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு மருந்துகளின் இருப்பு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தற்போது வரை தமிழகத்தில் 7 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதாகவும்; அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே