விஜய், அன்புச்செழியன் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு

நடிகர் விஜய் வீட்டில், அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும்  ஆவணங்கள், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

வரி ஏய்ப்பு புகாரின் பேரில், ஏஜிஎஸ் குழுமம், நடிகர் விஜய் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்  உள்ளிட்டோருக்கு சொந்தமான 38 இடங்களில், சோதனை நடத்தப்பட்டது. 

மதுரையில், அன்புச்செழியனின் வீடு, அலுவலகம் மற்றும் நண்பரின் வீடு ஆகிய இடங்களில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள்,  பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். 

அந்த ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

விசாரணைக்கு பிறகு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே