மத்திய பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக  சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்று கொண்டார். 

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அண்மையில் கவிழந்தது.

அக்கட்சியிலிருந்து மூத்த தலைவர் ஜோதி ராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் பாஜகவில் இணைந்தனர்.

இதனையடுத்து, அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் நேற்றிரவு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சிவராஜ் சிங் சௌஹான் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சிவராஜ் சிங் சவுகான், 4-வது முறையாக மத்தியப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றார்.

ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே