உண்மையான ஃபிட்னஸ் எது தெரியுமா.? தீபிகா படுகோன் சொல்வதை கேளுங்கள்..

ஒரு நபரின் ஃபிட்னஸ் என்பது வெளியே நாம் பார்க்கும் அவரது உடல் தோற்றம் மட்டும்மல்ல. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஃபிட்டாக இருப்பதை பற்றியது.

பாலிவுட் நடிகைகளில் மிக சிறந்த ஒருவர் தீபிகா படுகோன். தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் அவர், தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அதிலிருந்து மீண்டது எப்படி என்பதை பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மனநோயால் எந்த உயிரும் இழக்கப்படாத ஒரு உலகத்தைப் பார்க்க விரும்புவதாகவும் முன்பு கூறி இருக்கிறார்.

இந்நிலையில் ஃபிட்னஸ் என்பது உடல் தோற்றம் மட்டுமல்ல. மனம், உடல் மற்றும் ஆன்மாவின் சமநிலை என்று இவர் நம்புகிறார். ஃபிட்னஸ் பற்றி கருத்து தெரிவித்துள்ள தீபிகா படுகோன், ஒரு நபரின் ஃபிட்னஸ் என்பது வெளியே நாம் பார்க்கும் அவரது உடல் தோற்றம் மட்டும்மல்ல. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஃபிட்டாக இருப்பதை பற்றியது. ஒரு நபரின் மனம், உடல் மற்றும் ஆன்மா உள்ளிட்டவை சமநிலையாக இருப்பதே உண்மையான ஃபிட்னஸ் என்று எப்போதுமே தாம் நம்புவதாக தீபிகா கூறி உள்ளார்.

ஃபிட்னஸ் பற்றி மேலும் கருத்து தெரிவித்துள்ள தீபிகா படுகோன், ஃபிட்னஸ் என்பது ஒவ்வொரு நாளும் சிறந்த தேர்வுகளை மேற்கொள்வது பற்றியது. ஃபிட்னஸின் இறுதி வடிவம் நம்மை ஒரு சிறந்த நபராக மாற்றுகிறது என்று கூறி இருக்கிறார்.

சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு நவீன அறிவியல் மற்றும் பண்டைய ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட சுத்தமான தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து பொருட்களை தயாரிக்கும் OZiva நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் தீபிகா படுகோன். சான்றளிக்கப்பட்ட சுத்தமான மற்றும் தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்துடன் ஒவ்வொரு நபரின் வாழ்க்கை பயணத்தையும் ஆரோக்கியமான மற்றும் சிறந்த வாழ்க்கைக்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘ஹார் தாரா சே எ பெட்டர் யூ’ (har tarah se a better you) என்ற OZiva பிராண்டின் தத்துவத்தை தீபிகா ஊக்குவிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே