என் உயிருக்கு ஆபத்து – முதல்வரிடம் உதவி கோரிய இயக்குநர் சீனுராமசாமி..!!

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்வதாகவும், தனக்கு முதலமைச்சர் அவசரமாக உதவ வேண்டும் என்றும் பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

நீர்ப்பறவை, தர்மதுரை, தென்மேற்குப் பருவகாற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது மாமனிதன் என்ற படத்தை இயக்கி வருகிறார். மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வருகிறார்.

திரைப்படம் இயக்கி வரும் சீனு ராமசாமி அவ்வப்போது சமூகம் சார்ந்த கருத்துகளையும் கூறி வருபவர்.

இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் என்றும் முதலமைச்சர் உதவ வேண்டும் என்றும் அவசரம் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

அத்துடன் சில ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டுள்ள அவர், எந்த அரசியல் கட்சி சார்ந்த புகாரையும் தாம் தெரிவிக்கப்போவதில்லை என்றும்; தமிழர்களுக்கு ஆதரவாக தாம் எடுத்த நிலைப்பாடு குறித்தும் அதற்கு சிலர் ஆற்றி வரும் எதிர்வினைகள் குறித்துமே தெளிவுபடுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.

மற்றொரு ஆடியோவில் பத்திரிக்கையாளர்களை தாம் சந்திக்க விரும்புவதாகக் கூறி தமது முகவரியையும் இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே