தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர் – பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்..!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில், ” தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மொத்தமாக 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை திருப்பெரும்புத்தூரில் இருந்து பிற மாநிலத்திற்கு வழங்க கூடாது. தமிழகத்தில் இருந்து பிற மாநிலத்திற்கு ஆக்சிஜன் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.

இவற்றை தடை செய்தால் மட்டுமே தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.

இதனால் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிற மாநிலத்திற்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்வதை இரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயார் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் சென்னை உட்பட பிற மாவட்டங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நெருக்கடி சூழ்நிலை உருவாகும்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால் பிரதமர் மோடி மேற்கூறிய எனது கோரிக்கையை ஏற்று, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யும் ஆக்சிஜனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே