பின்னடைவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசை கமல் சாடியுள்ளார் .
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.
இந்திய அளவில் கரோனா தொற்று எண்ணிக்கையில் தமிழகம் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
அதேவேளையில், மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தமிழக அரசு.
டாஸ்மாக் கடையை மூடுவதற்காகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து மூட உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று (மே 14) நடைபெறவுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்த தமிழக அரசின் செயல்பாடுகளை மீண்டும் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.