10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் – அமைச்சர் செங்கோட்டையன்

ஊரடங்கு முடிந்த பிறகு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 27-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

இன்று காலை முதலமைச்சர் தலைமையில், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் இருந்தால் மட்டும்தான் 11ம் வகுப்பில் எந்த பாடத்தை எடுக்க முடியும் என்பதை தேர்வு செய்ய முடியும்.

பல்வேறு படிப்புகள், டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆகியவை 10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும். அதனால் 10ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் முடிவுகள் எடுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்.

தேர்வு அட்டவணை மே 3-ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும்.

ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒருநாள் விடுமுறை விடப்படும்.

மேலும் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்த நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே