ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் திமுகவினர் வெளிநடப்பு..!!

சட்டப்பேரவைத் தோதல் சில மாதங்களில் நடைபெற உள்ள அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் கலைவாணா் அரங்கில் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.

ஆளுநர் உரையாற்றத் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

ஆளுநர் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்புத் தருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார்.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

பிறகு ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார்.

நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைக்கிறார்.

ஆளுநா் ஆங்கிலத்தில் ஆற்றும் உரையைப் பேரவைத்தலைவா் தனபால் தமிழில் வாசிக்கிறார். அதைத் தொடா்ந்து அன்றைய தினக் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

அதன் பின், அலுவல் ஆய்வுக் கூட்டம் பேரவைத் தலைவா் தனபால் தலைமையில் நடைபெறும்.

கூட்டத்தில் அவை முன்னவரான ஓ.பன்னீா்செல்வம், எதிா்க்கட்சித் துணைத் தலைவா் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்று, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்துவது என முடிவு செய்வா்.

நடப்புக் கூட்டம் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறலாம் எனத் தெரிகிறது.

ஒவ்வொரு நாளும் ஆளுநா் உரை மீது விவாதம் நடைபெற்று, இறுதியாக விவாதத்துக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பாா்.

பேரவைக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றுவது உள்பட பல்வேறு மக்கள் பிரச்னைகள் எழுப்பப்பட உள்ளன.

மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடா்பான அறிவிப்பு பேரவைக் கூட்டத்தொடரின்போது வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே