இந்தியாவில் கொரோனா தொற்று 12 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 45,720 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 29,861 -ஆக அதிகரித்தது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 45,720 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது;

அதே கால அளவில் முதல்முறையாக 1,129 பேர் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 29,861 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோய்த்தொற்றுக்காக 4,26,167 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,82,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.

அங்கு இதுவரை 3,37,607 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில் தான் அதிக எண்ணிக்கையில் 1,86,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் தில்லியில் 1,26,323 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 22- ஆம் தேதி வரை 1,50,75,369 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் புதன்கிழமை மட்டும் 3,50,823 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதிப்பு: 12,38,635
பலி: 29,861
குணமடைந்தோர்: 7,82,606
சிகிச்சை பெற்று வருவோா்: 4,26,167

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே