புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் ராஜினாமா..!!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும், எதிர் கூட்டணிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில், சற்றுமுன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 திமுக எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், தற்போது ஒருவர் ராஜினாமா செய்திருப்பது அடுத்தடுத்த திருப்பம் ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே புதுச்சேரியில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருந்தனர். தற்போது, திமுக எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய ராஜினாமா செய்த எம்எல்ஏ வெங்கடேசன், புதுச்சேரியில் தற்போதுள்ள அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று குற்றசாட்டியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் ராஜினாமா செய்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாளை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோர இருந்த நிலையில், அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே