ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஒடிசா சென்ற மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்-ஐ சந்தித்துப் பேசினார்.

தலைநகர் புவனேஸ்வரில் உள்ள நவீன் பட்நாயக்கின் இல்லத்தில் சுமார் அரை மணிநேரம் வரை இந்த சந்திப்பு நீடித்தது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் அரசியல் அறிவுரை பெற்றுக்கொள்வதற்காக நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறதா?? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், கட்சியின் மூத்த தலைவர்கள் அதுபற்றி முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.

தற்போதைக்கு அவரது அரசியல் அனுபவத்தையும், அறிவுரையையும் கேட்கவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறினார்.

கமல்ஹாசனை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாக நவீன் பட்நாயக் தெரிவித்தார். கமலின் அரசியல் பயணம் மற்றும் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்து கேட்டறிந்ததாக நவீன் பட்நாயக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே