மோசடியில் ஈடுபட்டதாக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டிற்கு சீல்

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

2011 முதல் 16 வரை செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நடத்துனர், ஓட்டுனர், நிர்வாக பணிகள் வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக 2018-ல் புகார் எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். செந்தில்பாலாஜி முன்ஜாமின் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக்கின் வீடு, செந்தில்பாலாஜிக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

ஏற்றுமதி நிறுவனத்திற்கு செல்ல முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே