ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு படை வீரர் சுட்டு கொலை!

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில், பணியில் இருந்த ராணுவ வீரர், உடன் பணி புரியும் ராணுவ வீரரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கிரிகேஷ் குமார் என்ற வீரர், பணி முடிந்து ஓய்வறையில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்குவந்த திரிபுராவைச் சேர்ந்த சக வீரரான நிலம்ப சின்கா என்பவர், இன்சாஸ் துப்பாக்கியால் சரமாரியாக ஏழு ரவுண்ட் சுட்டதில், கிரிஜேஷ் குமாரின் வலது கழுத்து, இடது முழங்காலில் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு அதிகாரி கர்ணல் செரியன், துப்பாக்கியை கீழே வைத்து சரண்டர் ஆகுமாறு நிலம்பசின்காவை உத்தரவிட்டார்.

அதன்பேரில் அங்கு பணி புரிபவர்கள் நிலம்பசின்காவை பிடித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவராத நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே