இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தி.நகர் பகுதியில் இருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நல்லகண்ணு கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

அந்த பகுதியில் மற்றொரு திட்டத்தை கொண்டுவர அரசு திட்டமிட்டதால், நல்லக்கண்ணு உட்பட அனைவரையும் வெளியேற உத்தரவிடப்பட்டது.

இங்கு குடியிருந்த நல்லகண்ணு தாமாகவே முன்வந்து, அவரே வீட்டை காலி செய்வதாக தெரிவித்தார்.

இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நல்லகண்ணோடு பேசி, தங்களுக்கு வீடு தர தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இதையடுத்து தற்போது வீட்டுவசதி வாரியம் சார்பாக நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நந்தனம் பகுதியில் அரசு ஒதுக்கியுள்ள வீட்டிற்கு நல்லக்கண்ணு விரைவில் குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே