தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11ம் தேதி வெளியிடுகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல்அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களின் மனதை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக விளங்கும்.

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படும்.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக வெற்றிகரமாகவும் நடைபெறுகிறது” என்றார்.

வரும் 12-ஆம் தேதி தேர்தல் வேட்பு மனு தாக்கலை தொடங்க இருப்பதால் 11ஆம் தேதி தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே