ராமதாஸ் மீது திமுக அவதூறு வழக்கு

முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக சார்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்ற கழக நாளிதழான முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து பஞ்சமி நிலம் அல்ல என்பதற்கான  ஆதாரமும், விளக்கமும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பரப்பி வரும் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  கடந்த மாதம் 21-ம் தேதி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அவர்கள் எவ்வித பதிலும் தெரிவிக்காததால் முரசொலி அறக்கட்டளை சார்பில், அதன் உறுப்பினரும், திமுக எம்பியுமான ஆர்.எஸ் பாரதி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் மற்றும் சீனிவாசன் இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே