தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் இந்த நான்கு மாதங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
இலவச ரேஷன் பொருள் வழங்குவதற்கு முன்பே வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை அதிகாரிகள் டோக்கன்கள் வழங்கி வருகின்றனர் என்பதும் அந்த டோக்கன்களை வைத்து பொதுமக்கள் ரேஷன் கடைகளில் இலவச பொருட்களை வாங்கிக் கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்டு இலவச அரிசி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் நாளை முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன்கள் வழங்கப்படும் பணிகள் முடிவடைந்தவுடன் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் டோக்கன்களை கொடுத்து இலவச ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.