தேவேந்திர குல வேளாளர் மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையிலும் நிறைவேறியது..!!

தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் உள்ளிட்ட சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் பொது பெயரிடக்கோரி பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தன.

இந்த கோரிக்கையை பரிசீலிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் தேதி ஹன்ஸ்ராஜ் வர்மாவை தலைவராக கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.

இந்த குழுவின்பரிந்துரையின் படி தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொது பெயரிட மாநில அரசின் பரிந்துரை மீது மத்திய அரசின் ஆணை பெற தமிழக அரசு அனுப்பியது. 

இதனை தொடர்ந்து பட்டியலினத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகை செல்லும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழலில் 7 உட்பிரிவுகளை இணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இரு அவைகளிலும் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியதால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின் சட்டமாக இயக்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே