டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரிக்க இடைத்தரகர் ஜெயக்குமாரையும், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனையும், இன்று ராமேஸ்வரம் அழைத்துச் செல்ல சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் ஏற்கனவே காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி, நேற்று இருவரையும் மீண்டும் காவலில் எடுத்தது.
குரூப் 2ஏ தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், அவர்கள் இருவரையும் இன்று மாலை ராமேஸ்வரம் கூட்டிச் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
குரூப்-2 ஏ விவகாரம் தொடர்பாக இடைத்தரகரான ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியரான ஓம் காந்தன் ஆகிய இருவரும் சேர்ந்து எத்தனை நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக அரசு பணியில் சேர்த்து விட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களது பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.