இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

தில்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையல், புதன்கிழமையான இன்று இந்தியாவில் இதுவரை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 28 பேருக்கு மருத்துவப் பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 28 பேரில், இத்தாலியைச் சேர்ந்த 16 பேரும் அடங்குவர். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தில்லியில் கரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் ஆக்ராவுக்கு சுற்றுலா வந்த போது அவருடன் பழகிய 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தில்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,

  • தில்லியில் ஒருவருக்கும்,
  • ஆக்ராவில் 6 பேருக்கும்,
  • இத்தாலியைச் சேர்ந்த 16 பேருக்கும்,
  • ஒரு இந்திய ஓட்டுநருக்கும்,
  • தெலங்கானாவில் ஒருவருக்கும்,
  • கேரளாவில் மூன்று பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே