கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதையடுத்து, தற்போது திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.

ஆனால் , இங்கு போதுமான வசதி இல்லை எனவும் கூறி மீண்டும் கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இன்று காலை 11 மணிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவுள்ளார்.

இந்த ஆய்விற்கு பின்னர், வணிகர் சங்க நிர்வாகிகளோடு துணை முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே