அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது – உச்சநீதிமன்றம்

பட்டியலினத்தவர்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் பட்டியலின பிரிவினரிடையே உள்ஒதுக்கீடு வழங்கும் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு அருண் மிஸ்ரா அமர்வு மாற்றியது.

கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் இருப்பினும் உள்ஒதுக்கீடு முறை செல்லாது என கடந்த 2005-ஆம் ஆண்டு 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்ததால் இந்த வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே