கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் தினமும் 350 காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

மேலும் இந்த காய்ச்சல் முகாம்களில் 3.25 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.

மேலும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தின் மூலம் 35,000 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

812 கிராமங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணி நடைபெற்று வருகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.687 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே