கிருஷ்ணகிரிக்கு வந்த லோகஸ்ட் உண்மை நிலை இதுதான் வேளாண்துறை அதிகாரிகள் தகவல்

உலகம் முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் தானியங்களை அழித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்துள்ள நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் திடீரென தோன்றியது.

இதனை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்கு முன்னதாக வாழை மரங்கள் ,செடிகளில் வெட்டுக்கிளிகள் கூடாரம் இட்டு அமர்ந்து கொண்டு அதனை சேதம் செய்தது. இந்நிலையில் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர். அது குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள பேட்டியில்…. கிருஷ்ணகிரியில் தோன்றியிருப்பது பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை. இது உள்ளூர் வெட்டுக்கிளிகள். இந்த வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு இல்லை. பப்பாளியில் இருக்கும் செடிகள் வாழை இலைகள் போன்றவற்றை திங்கும் வெட்டுக்கிளிகள். இதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Related Tags :

desert locust| Krishnagiri

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே