மீண்டும் டிக் டாக் செயலிக்கு ஆதரவளித்த கூகுள் இந்த முறை 8 மில்லியன் விமர்சனங்கள் நீக்கம்.
சமூக வலைதளங்களில் சமீபத்தில் டிக் டாக் VS யூடியூப் என்ற போட்டி சென்று கொண்டிருந்தது. இதன் காரணமாக டிக் டாக் பிரபலங்களும் யூடியூப் பிரபலங்களும் மாறி மாறி மோதிக்கொண்டனர். இந்த போட்டியில் யூடியூப் பிரபலங்கள் வெற்றிபெற்றனர.
#Bantiktok, #Tiktokdown, #BanTikTokinIndia போன்ற பல டேக்குகள் கடந்த ஒரு மாதமாக டிரெண்ட் ஆகி வந்தது. இதன் காரணமாக யூடியூப் பிரியர்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்திற்குச் சென்று அங்கு இருந்த டிக் டாக் செயலிக்கு எதிர்மறை ரிவ்யூ கொடுத்தனர்.
இதன் காரணமாக 4.6 ஆக இருந்த மதிப்பு 1.3 என்ற நிலைக்கு சென்றது. அதிர்ச்சியடைந்த டிக்டாக் நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் கிட்டதட்ட 5 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கம் செய்தது. அதன் பின்னர் மீண்டும் தற்போது 8 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கம் செய்து தற்போது மீண்டும் தனது ரிவ்யூ மதிப்பை 4.6 ஆக மாற்றியுள்ளது
Related Tags :
tiktok | bantiktok