இன்று முதல் ரேஷன் கடைகள் புதிய நேரத்தில் திறந்திருக்கும்..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கள் குறையத் தொடங்கியதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் கடைகள் திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து நியாயவிலை கடைகளும் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை தொடரும் எனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா 2வது அலை காரணமாக இதுவரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன.

தற்போது ரேஷன் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே