டெல்லி வன்முறை நாட்டிற்கு அவமானம் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி வன்முறை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , குலாம் நபி அசாத், ஏ.கே அண்டனி உள்ளிட்ட தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.
டெல்லி மக்களின் பாதுகாப்பு, உடைமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் குடியரசு தலைவரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கலவரத்தின்போது மத்திய மாநில அரசுகள் பார்வையாளர்களை போல வாய்யை மூட வேடிக்கை பார்த்ததாக குற்றம்சாட்டினார்.
கலவரத்தை கட்டுப்படுத்தாத உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 4 நாட்களாக டெல்லியில் நிகழ்ந்த வன்முறை நாட்டிற்கு அவமானம் என்றார்.
மத்திய அரசின் தோல்வியால் டெல்லியில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.