நிச்சயம் வலிமை பட அப்டேட் – ட்விட்டர்வாசியின் கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்..!!

வானதி சீனிவாசன் நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக-வின் வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வானதி சீனிவாசனிடம் ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு வானதி சீனிவாசன் நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். 

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே