10 ஆம் வகுப்பு தேர்வு நடக்குமா? நடக்காதா? – அமைச்சர் செங்கோட்டையன்

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது.

தற்போது இந்நோய் இந்தியாவிலும் மிக விரைவாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

தற்போது 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்படுமா என்பதற்கான அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தப்போது, ஈரோடு மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு அதை பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே