பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் சீன பாதுகாப்புத்துறை அமைச்சருடன் சந்திப்பு

லடாக் எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது.

இதில் பங்கேற்கச் சென்ற ராஜ்நாத்சிங்கை சந்திக்க வேண்டும் என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் விய் ஃபென்ஹி ( WEI FENGHE ) கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டதை அடுத்து, இருநாட்டு அமைச்சர்களும் மாஸ்கோவில் நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

எல்லையில் அமைதி நிலவ பரஸ்பர நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது ராஜ்நாத்சிங் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் முன்னிலையில் உரை நிகழ்த்திய ராஜ்நாத்சிங், ஆக்ரமிப்புகள் இல்லாத சூழல் தான் எல்லையில் அமைதியை உருவாக்கும் என்று கூறினார்.

முரண்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதித் தீர்வு காண்பதும்தான் பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும் என்றும் அவர் சீனாவுக்கு வலியுறுத்தினார்.

அண்டைநாடுகள் சர்வதேச விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காண அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரமப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் தற்போதைய சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக விவரித்தார்.

இரண்டு நாடுகளும் மற்றவர்கள் புரிந்துக் கொள்ளுவதை விட கூடுதலான பலத்துடன் ஒன்றை ஒன்றை எதிர்த்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.

தொடர்ந்து சீனாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப் ரஷ்யாவை விட அதிகமாக பேச வேண்டிய நாடு என்றார்.

188 நாடுகளில் கொரோனா வைரசைப் பரப்பி உலகத்தை துன்பத்தில் ஆழ்த்தியதாகவும் சீனாவை அதிபர் டிரம்ப் சாடினார்.

பிரதமர் மோடி மகத்தான மனிதர் என்று புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் தமக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2759 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே